08.04.21

 

இன்றைய சிந்தனைக்கு

 

மன்னித்தல்:

சுயத்தை மன்னிப்பது என்பது மற்றவர்களையும் மன்னிப்பதற்கான ஆற்றலை கொண்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்கள் தவறு செய்கின்றபோதுஅவர்களை மன்னிப்பது கடினமாக இருக்கலாம். அத்தவற்றை மீண்டும் மீண்டும் நமக்குள் நினைவுபடுத்தும் போக்கு நமக்கு இருக்கிறது. எதனால் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதை நாம்  புரிந்துகொள்வதற்கு சிரமப்பட்டு முயற்சி செய்யும் போதிலும்அதை புரிந்துகொள்வது பெரும்பாலும் நமக்கு கடினமாக இருப்பதை காண்கிறோம். மற்றவருடைய நடத்தையை நம்மால் புரிந்துகொள்ளமுடியாதபோதுஅவர்களை மன்னிப்பது நமக்கு கடினமாக இருக்கின்றது.

செயல்முறை:

என்னை நான் நேசிக்கும்போதுமேலும் நடக்கின்ற அனைத்திலிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடியும்போதுஎன்னையும் என்னால் மன்னிக்க முடிகின்றது. நான் கற்றுக்கொண்டதை முன்னேற்றத்திற்காக என்னால் பயன்படுத்த முடியும். மற்றவருடைய கண்ணோட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிவதோடுஅவர்களை என்னால் மன்னிக்கவும் முடிகின்றது.