08.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

உண்மை:

உண்மையை அனுபவம் செய்வதென்றால்அதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் ஒரு பயனுள்ள கருத்தை புதிதாக கேட்கும்போதுஇயற்கையாகவேஅதனை நம் வாழ்க்கையில் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால்அதனை நடைமுறைப்படுத்தும் ஊக்கம்மிக விரைவில் மறந்துவிடுகிறது. சிறிது காலத்திற்கு பிறகுஅக்கருத்தைஒரு தத்துவமாக நினைவு செய்கின்றோமே தவிரஅதனை நடைமுறைப் படுத்தும் உற்சாகமில்லை. அதனை நடைமுறைப்படுத்தும்தைரியம் நம்மிடமில்லை அல்லது நம்முடைய கடந்தகால அனுபவத்தினால் நாம் மனச்சோர்வு அடைந்திருக்கிறோம்.

செயல்முறை:

என்னுடைய வாழ்க்கையில் புதிதாக ஒரு அம்சத்தை கொண்டுவர விரும்பும்போதுஅதற்காக நான் ஒரு இடத்தை என் மனதில் உருவாக்கி கொள்ள வேண்டும். நான் கொண்டு வரவிருக்கும் மாற்றத்தினால்என்னுடைய வாழ்க்கையானது எவ்வாறு இருக்குமென்று நான் கற்பனை செய்து பார்க்கும்போதுஅதை நடைமுறைப்படுத்த நான் ஆரம்பிக்கிறேன். சிறிது சிறிதாக என்னுடைய தைரியம் வளர்கிறது. உண்மை என்னை வலிமையாக்குகிறது. மேலும்எனக்கு பயனளிக்கும் வகையில் என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்வதில் நான் வெற்றியடைகின்றேன்.