08.06.22

இன்றைய சிந்தனைக்கு

மரியாதை:

மற்றவர்களுடைய பலவீனங்களைக் கண்டும் காணாமல் இருப்பது என்பது செல்வந்தராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் மற்றவர்களுடைய பலவீனங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருக்கின்றோம். நாம் மற்றவர்கள் மீது கொண்டிருக்கும் மனப்போக்கை பாதிக்கும், நம்முடைய பரிமாற்றங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் இதை நாம் உடனடியாக பார்க்கின்றோம். இந்த பலவீனங்களைத் தவிர மற்றவற்றை பார்க்க நாம் சிரமப்படுகின்றோம்.

செயல்முறை:

அனைவருடைய தனித்துவமான பரிசுகளை விழிப்புணர்வில் வைத்திருப்பதே இதற்கான தீர்வாகும். இவ்வாறு அதிகமாக என்னால் சிறப்புத்தன்மைகளை பார்க்க முடியும்போது, அந்த அளவிற்கு, நான் மற்றவர்களையும் அவர்களிடம் இருக்கும் சிறப்புகளை அனைவருடைய நன்மைக்காக பயன்படுத்துமாறு உற்சாகப்படுத்துகின்றேன். படிப்படியாக மற்றவர்களுடனான என்னுடைய உறவுமுறைகளை மாற்ற முடிவதை என்னால் பார்க்க முடியும். மேலும் ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் செழுமையையும் புதுமையையும் என்னால் அனுபவம் செய்ய முடிகிறது.