08/07/20

இன்றைய சிந்தனைக்கு

ஒரு தலைவராக இருப்பது என்பது தான் ஒரு முன் உதாரணமாக இருந்து வழிநடத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எது சரி எது சரியில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால்சரியானது எதுவாக இருந்தாலும்அதன்படி வாழும் ஒருவர் அவருடைய வார்த்தைகள் மற்றும் செயல்களில் அந்த சரியானவற்றை காண்பிப்பவர்,  மற்றவர்களை ஊக்குவித்து அவர்கள் மாறுவதற்கு ஊக்கமளிகின்றார். பிறகு மற்றவர்களை ஊக்குவிக்கும் வார்த்தைகளை அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை.

செயல்முறை:

என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் தரமானதாக இருக்கும்போது,  வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும் மக்கள் என்னிடம் வருகிறார்கள். மக்கள் என்னைப் பார்த்து என்னிடமிருந்து தூண்டுதலடையும்போது என் வார்த்தைகளையும் செயல்களையும் கவனித்துக் கொள்ள என்னால் முடிகின்றது,  அதனால் நான் பேசும் வார்த்தைகளும் செய்யும் செயல்களும் எனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கின்றன.