08.08.22

இன்றைய சிந்தனைக்கு

பகுத்தறிதல்

நன்றாக பகுத்தறிபவரே உண்மையான நன்மையை கொண்டுவர முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

இயற்கையாகவே, அனைவரும் மற்றவர்களுடைய நன்மைக்காக செயல்படுவதைவிட, தங்களுடைய சொந்த நன்மைக்காகவே செயல்படுகிறார்கள். ஆனால் சில சமயங்களில், மற்றவர்கள் நம்முடைய பங்களிப்பை பாராட்டுவதாக தோன்றவில்லை. இது வழக்கமானது. ஏனென்றால், நம்மால் அவர்களுடைய தேவையை அறிந்துகொள்ள முடியவில்லை. நாம் எதை முக்கியம் என்று உணர்கின்றோமோ அதை கொடுக்கும் போக்கை கொண்டுள்ளோம், ஆனால் இது மற்றவர்களுடைய தேவையை புறக்கணிப்பதாக இருக்கலாம்.

செயல்முறை:

நன்றாக பகுத்தறிபவரே மற்றவர்களுடைய தேவையை புரிந்துகொண்டு அதற்கேற்ப கொடுக்கமுடியும். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வார். சரியான நேரத்தில் சரியான நபருக்கு என்னால் உதவி செய்ய முடியும்போது, என்னால் அவர்களுடைய நம்பிக்கையை பெற முடியும். நான் பதிலுக்கு அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும், ஆனால் சரியான நேரத்தில் உதவி செய்ததற்கான திருப்தி இருக்க வேண்டும்.