08.12.18

இன்றைய சிந்தனைக்கு

வெற்றி:

நமது பலவீனங்களை வெற்றிக்கொள்ள உறுதியான எண்ணம் நமக்கு உதவுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் நம்மிடம் இருக்கும் எந்த ஒரு பலவீனத்தை அறிந்துகொள்ளும்போதும், அவற்றை அகற்ற நாம் முயற்சி செய்கின்றோம். ஆனால் வழக்கமாக நாம் ஒரு சில நாட்களுக்கு அதில் பெரும் கவனம் செலுத்துகிறோம். சிறிது நாட்களுக்கு பிறகு, நாம் ஆர்வத்தை இழந்துவிடுகிறோம், பலவீனம் மீண்டும் நம்மை பலமாக கைப்பற்றிக்கொள்கிறது. நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எங்கு இந்த முயற்சியை அதிக ஆர்வத்தோடு தொடங்கினோமோ அங்கேயே நாம் இருப்பதை காண்கின்றோம்.

தீர்வு:

நம்முடைய எந்த பலவீனத்தையும் வெற்றிக்கொள்ள, அதை அகற்ற நம் மனதில் ஒரு வலுவான நோக்கம் வேண்டும். இதனோடு நம்பிக்கை இழந்துவிடாமல் நம்மில் மாற்றத்தை கொண்டுவர உறுதியான எண்ணத்தையும் நாம் கொண்டிருக்கவேண்டும். இந்த முயற்சியில் நாம் மந்தமாக இருப்பதாக உணரும்போது, நம் வாழ்க்கையில் அந்த குறிப்பிட்ட பலவீனம் நமக்குத் தேவையில்லை என்று நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். பிறகு பலவீனத்தை முழுமையாக அகற்றுவதற்கு நம்மால் உழைக்க முடியும்.