09.01.23

இன்றைய சிந்தனைக்கு......

விவேகம்:

விவேகம் என்பது முன்கூட்டியே தடையை அறிந்துகொண்டு அதற்கு தயாராகுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய விவேகம் தடைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும் அதற்கு தயாராகவும் நமக்கு உதவுகின்றது. இந்நிலையில் இந்த தடைகளை பார்க்கும்போதிலும் கூட பயம் இருப்பதில்லை. மேலும், விவேகம் என்பது காரியங்கள் சரியானதாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் கொண்டிருக்காமல் முன்கூட்டியே ஆபத்துக்களை தெரிந்துகொண்டு தயாராகுவதாகும்.

அனுபவம்:    

நம்முடைய மனநிலையை நாம் எப்போதுமே விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். நம்முடைய ஆயத்தமானது எவ்விதமான சூழ்நிலையை நாம் சந்திக்க நேரிட்டாலும் நாம் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு நாம் தயாராகும்போது நம்மால் ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வித பயமின்றி கையாள முடியும்.