09.02.21
இன்றைய சிந்தனைக்கு
பணிவுத்தன்மை:
உண்மையான பணிவுத்தன்மை சுய மரியாதையிலிருந்து பெறப்படுகின்றது.
சிந்திக்க
வேண்டிய
கருத்து:
நம்மை
நாம்
மதிக்கும்போது, ஒவ்வொரு
சூழ்நிலையிலும்
நம்மால்
பணிவாக இருக்க
முடிகின்றது.
நமக்கு
சுய-மரியாதை
இல்லாத போது, எவ்விதமான
விமர்சனம்
அல்லது
இகழ்ச்சி நம் அகங்காரத்தை
பாதிக்கின்றது. இதனால்
நம்முடைய
பணிவுத்தன்மையை
நாம் இழக்கின்றோம்.
செயல்முறை:
நான் இகழ்ச்சியால் பாதிக்கப்படுவதை பார்க்கும்போது, நான் என்ன செய்துகொண்டிருக்கின்றேன் என்று சோதித்து பார்ப்பது மிகவும் அவசியம். நான் என்னுள் பார்த்து, என்னுடைய சொந்த சிறப்பான நற்குணங்களை பாராட்ட கற்றுக்கொள்வதோடு, அவற்றை என்னுடைய தினசரி வாழ்க்கையில் எவ்வாறு நான் பயன்படுத்துவது என்று சிந்திப்பதும் அவசியம். என்னுடைய தன்னம்பிக்கை வளர வளர, நான் பணிவுதன்மையுடையவராக ஆகுவேன்.