09.05.22

இன்றைய சிந்தனைக்கு

நிகழ்காலத்தில் இருப்பது.

நான் செய்யும் செயல்களின் முக்கியத்துவத்தை புரிந்திருப்பது என்பது, எனக்கான அதிர்ஷ்டத்தை நான் உருவாக்கிக்கொள்வது என்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, ஏதாவது தவறு நடக்கும்போது, நாம் அதிர்ஷ்டத்தை குறை கூறுகின்றோம். வாழ்க்கை நியாயாமானதாக இல்லை என்று குற்றம் சாட்டுகின்றோம் அல்லது கடந்தகால செயல்களினால், தற்போதைய சூழ்நிலை இருக்கின்றது என்று வருத்தப்படுகின்றோம். ஆனால், கடந்தகால தவறுகளை சிந்தித்து, அதில் மூழ்கியிருந்தால், நம்மால் நிகழ்காலத்தை முழுமையாக அனுபவம் செய்ய முடியாது.

செயல்முறை :

என்னுடைய கடந்தகால செயல்களை நான் சபிப்பதற்கு பதிலாக, நிகழ்காலத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்வது அவசியம். நான் இன்றைக்கு என்ன செய்தாலும் அது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எனக்கு நன்மை அளிக்கும். நான் சரியான செயல்களை செய்வதில் கவனம் செலுத்தி எனக்காக சிறந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கிகொள்கின்றேன்.