09/07/20

இன்றைய சிந்தனைக்கு

எதிர்மறைதன்மையுடன் அடையாளம் காணப்படுவதிலிருந்து விடுபட்டிருப்பது என்பது எப்போதும் லேசாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தன்னிடமிருக்கும் எதிர்மறை குணாதிசயங்களுடன் தன்னை அடையாளம் காணும் ஒருவர் எப்போதும் அதைப் பற்றி சிந்திக்கிறார். அவரது அனைத்து செயலிலும் பேச்சிலும் இந்த எதிர்மறையின் சுவடு உள்ளது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் இந்த எதிர்மறை தன்மையின் அடையாளம் வலுபெருவதால் அவரால் இந்த எதிர்மறையிலிருந்து விடுபட முடியாதுள்ளது. சிறிதுசிறிதாக மற்றவர்களும் அதே வழியில் அவரை அடையாளம் காண்கிறார்கள்.

 

செயல்முறை:

என்னுடைய எதிர்மறை குணாதிசயங்களுடன் என்னை அடையாளம் காண்பதிலிருந்து நான் விடுபட்டிருக்கும்போது,  என்னால் தொடர்ந்து லேசாக இருக்க முடிகின்றது. சூழ்நிலைகள் அல்லது என் எதிர்மறையைத் தூண்டிவிடும் நபர்கள் இருக்கலாம்,  ஆனால் என் உள்ளார்ந்த நிலைப்பாட்டை என்னால் பராமரிக்க முடிகின்றது. ஏனென்றால் என்னுடைய எதிர்மறைதன்மையுடன் என் அடையாளத்தை என்னால் முடிக்க முடிந்தது.