09.08.22

இன்றைய சிந்தனைக்கு

சுய-முன்னேற்றம்

நம்முடைய பரிசுகளை வளரச் செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையை வளப்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, பெரும்பாலும் நாம் அவர்களுடைய எதிர்மறையான அம்சங்களினால் பெரிதும் கவலை அடைகின்றோம். அவர்களுடைய நற்குணங்கள் மறைக்கப்படுகின்றது. நாம் எதிர்மறையானவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதால், அது கடந்து போவது அதிக சிரமமாக இருப்பதை பார்க்கின்றோம். நாம் நம்மையும் மற்றவர்களையும் எதிர்மறையால் நிரப்புகின்றோம் என்பதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை.

செயல்முறை:

நம்முடைய சொந்த நற்குணங்களையும் மற்றவர்களுடைய குணங்களையும் அறிந்து கொள்வது வாழ்க்கையை அழகால் நிரப்புகிறது. நான் மற்றவர்களுடைய தனித்துவமான குணங்களை அறிந்துகொள்ளும்போது, அவர்கள் அவற்றை மேம்படுத்திக்கொள்ள என்னால் ஊக்கமளிக்க முடியும். என்னுடைய சொந்த நற்குணங்களை நான் பயன்படுத்துவது, என்னையும் மற்றவர்களையும் வளப்படுத்துகின்றது. தேவைப்படுகின்ற நேரத்தில்என்னால் இந்த குணங்களை கொண்டுவர முடிகின்றது.