09.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

ஞானம்:

உண்மையான ஞானம் சரியான காரியத்தை சரியான நேரத்தில் செய்வதற்கான சக்தியை நமக்கு கொடுக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, புது விஷயங்கள் கற்றுக்கொள்வதை நாம் இரசிக்கின்றோம், ஆனால் பெரும்பாலும், நம்முடைய ஞானத்தை நடைமுறையாக மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கிறது.

செயல்முறை:

எனக்கு உதவுக்கூடும் என நான் நினைக்கின்ற விஷயங்களை பற்றி நான் கேட்கும்போதோ அல்லது பார்க்கும்போதோ, அவற்றை என்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்க நான் முயற்சி செய்ய வேண்டும். இதை நான் தொடர்ந்து செய்யும்போது, நான் செய்வதை மாற்றுகின்ற ஞான சக்தியை நான் அறிந்து கொள்கின்றேன். என்னால் மென்மேலும் உள்ளார்ந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிகின்றது. என்னுடைய வாழ்க்கையில், ஒவ்வொரு ஞானக் கருத்தையும் சரியான சூழ்நிலைகளில் நான் தொடர்ந்து பயன்படுத்தும்போது, எச்சூழ்நிலையையும் கையாள்வதற்கு தேவையான திறமைகளால் என்னை நான் தயார்படுத்தி கொள்கின்றேன்.