10.01.21

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை

என்னால் வெற்றி பெற முடியும் என்று சிந்திப்பது வெற்றியை உறுதிப்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்கு கிடைக்கக்கூடிய வளங்கள் அல்லது நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உதவியை நாம் வெற்றிக்கான காரணமாக கூற முனைகின்றோம். நாம் சிறந்த முயற்சியை செய்த போதிலும்சிலநேரங்களில் நாம் தோல்வியடைவதைக் காண்கின்றோம். நாம்இதை  துரதிருஷ்டம் அல்லது ஒரு எதிர்மறையான சம்பவம் என்று குற்றம் சாட்டலாம்.

செயல்முறை:

இன்று என்னுடைய வெற்றியானது எவ்வாறு என்னிடம் இருப்பதன் அடிப்படையில் இல்லாமல் அவற்றை கொண்டு நான் என்ன செய்கின்றேன் என்பதில் உள்ளது என்பதை நான் கவனிப்பேன். என்னால் வெற்றி பெற முடியும் என்று நான் நம்பும்போதுநான் வெற்றி அடைவேன்.