10.01.23
இன்றைய சிந்தனைக்கு......
வளைந்துகொடுக்கும்தன்மை:
வளைந்துகொடுக்கும்தன்மை பிரச்சனைகளை ஆசிரியர்களாக்குகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
வளைந்து கொடுக்கும்தன்மை முடிந்தவரை வாழ்க்கையை மென்மையாகவும் தைரியமாகவும் நேரத்துடன் கடந்து செல்ல உதவுகின்றது. பிரச்சனைகள் வரும்போது, பயத்தினால் நின்றுவிடுவதற்கு பதிலாக, நம்மால் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்ல முடிவதோடு தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்யமுடியும்.
அனுபவம்:
நாம் எதிர்கொள்கின்ற எவ்வித பிரச்சனையிலும், நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் அதே போல் இருந்துவிடாது என்றும், மேலும் காரியங்கள் மோசமானதாக ஆகக்கூடும் என நினைவு செய்துகொள்வது அவசியமாகும். இப்போது நம்மால் வளைந்துகொடுக்க முடியும்போது மட்டுமே நம்மால் எதிர்காலத்தில் நாம் சந்திக்கக்கூடிய எந்த சூழ்நிலையிலும் வளைந்துகொடுக்க முடியும்.