10.02.21                                    

 இன்றைய சிந்தனைக்கு 

அன்பு:

அன்பு இருக்குமிடத்தில்மிகவும் சிரமமான காரியம் செய்வது கூட சுலபமானதாகிவிடுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஏதாவது ஒன்று சிரமமானதாக இருந்தால் அதில் அன்பு சேர்க்கப்படவில்லை என்பதாகும். அன்பு இருக்குமிடத்தில் மலை போன்ற பாரமான காரியம் கூட பஞ்சு போல் இலேசாக ஆகிவிடுகின்றது. அன்பு காரியத்தை சுலபமாகவும் லேசாகவும் ஆக்கிவிடுகின்றது.

செயல்முறை:

இன்றைய நாள் நான் என்னுடைய வேலையை நேசிக்கின்ற நாள். நான் என்ன செய்துக்கொண்டிருந்தாலும் நான் செய்யும் வேலையை நான் நேசிக்கின்றேன் என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனக்கு மிகவும் சிரமமாக இருக்கும் ஒரு காரியத்தை இன்று நான் சோதித்து பார்ப்பேன். அக்காரியத்தை  நான் விரும்புவதாகவும்அதனால் தான் அதை நான் செய்து கொண்டிருக்கின்றேன் என்றும் நினைவு படுத்திக்கொள்வேன்.