10.05.22

இன்றைய சிந்தனைக்கு

மற்றவர்களுக்கு சேவைசெய்வது

மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வாய்ப்புகளை உருவாக்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பெரும்பாலும் நாம் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யவோ அல்லது சேவை செய்யவோ விரும்புகின்றோம்.  ஆனால் அதற்கான சரியான வாய்ப்பு அமையாதிருப்பதை நாம் காண்கின்றோம். நமக்கு மற்ற சமயங்களில் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நமக்கு விருப்பமானதாக இல்லை.  அதாவது நம்முடைய ஆசைகளுக்கு அது பொருந்தவில்லை.

செயல்முறை:

நான் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதை பற்றி தொடர்ந்து சிந்திப்பது அவசியம். சிறந்த சூழ்நிலைகள் அல்லது வாய்ப்புகள் வருவதற்காக நான் காத்திருக்க மாட்டேன். என்னால் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு நான் உதவி செய்வேன். சின்னச்சிறு வழிகளில் வழங்ககூடிய உதவி பெரிய அளவில் சேவை செய்வதற்காக வாய்பை எனக்கு கொடுக்கும்.