10/07/20

இன்றைய சிந்தனைக்கு

உள்ளுக்குள் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு கண்ணாடியாக மாறிவருகிறார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

புரிந்துணர்வுடன் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் திறனைக் கொண்டிருக்கும்போதுஅத்துடன் கூடவே உள்ளுக்குள் தெளிவையும் சுத்தத்தையும் கொண்டுவருவதற்கான திறனும் இருக்கிறது. அத்தகைய ஒரு நபர் இயல்பாகவே மற்றவர்கள் தங்களுடைய சொந்த பரிபூரணத்தைக் காண ஒரு சுத்தமான கண்ணாடியாக மாறிவிடுகிறார். அவர் அவரை சுற்றியிருப்பவர்களுக்கு அவர்கள் உள்ளிருக்கும் சிறந்தவற்றை வெளிக்கொண்டு வர ஒர் உத்வேகம் ஆகின்றார்.

செயல்முறை:

என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும்,  எப்போதும் என்னை மாற்றிக்கொள்வதற்கு என்னால் முடிந்தளவு முயற்சி மேற்கொள்ளும் போது,  என் உள்ளார்ந்த குணங்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிகிறது. என் உள்ளார்ந்த பூரணத்தை அனுபவிக்கும் மகிழ்ச்சி எனக்கு உண்டு,  இது இயற்கையாகவே சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல பாதிப்பை உண்டாக்குகிறது.