10.08.22

இன்றைய சிந்தனைக்கு

சுய-மரியாதை

ஒவ்வொரு எதிர்விளைவும் ஒருவருடைய சொந்த சுய-மரியாதையை பிரதிபலிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்கு குறைவான சுய-மரியாதை இருக்கும்போது, சின்னஞ்சிறு சூழ்நிலை கூட பலம்வாய்ந்த எதிர்மறையான எதிர்விளைவை கொண்டுவரும். நாம் தொடர்ந்து சூழ்நிலைகளை குற்றம்சாற்றி, நாம் பொறுப்பேற்காமல் இருப்பதற்கு காரணங்களாக அவற்றை பயன்படுத்துகின்றோம். நாம் செய்வதறியாது உணர்வதோடு, நம்மால் சூழ்நிலைகளை எதுவும் செய்ய இயலவில்லை. இவ்விதமான எதிர்மறையான நடத்தை கடினமான சூழ்நிலைகளில் காரியத்தை மேலும் மோசமாக்குகின்றது. 

செயல்முறை:

என்னுடைய சுய-மரியாதை உயர்வாக இருக்கும்போது, மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் கூட, என்னால் நேர்மறையாக இருக்க முடிகின்றது. இது, சூழ்நிலை என்னை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, சூழ்நிலையை நான் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றது.