10/09/20

இன்றைய சிந்தனைக்கு

சாத்தியமற்றது கூட உறுதியுடன் சாத்தியமாகும்அங்கு  நிச்சயமாக வெற்றி இருக்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து: பாதகமான சூழ்நிலைகளில் ஒரு காரியத்தை ஒருபோதும் கைவிடாதவர் மனஉறுதியோடு இருப்பவர். அவரால் அனைத்து சவால்களையும் சுய முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகப் பயன்படுத்த முடிகின்றது. கையாள கடினமாகத் தோன்றும் சூழ்நிலைகளில் அவர் ஒருபோதும் நின்றுவிடுவதில்லை,  ஆனால் அவரால் தடைகளை எளிதில் கடக்க உதவும் புதிய யோசனைகளை ஆக்கப்பூர்வமாக வெளிக்கொண்டுவர முடிகின்றது.

அனுபவம்: மனஉறுதியானதுஎன் மீதும்,  நான் அடையத் திட்டமிட்டதை அடைவதற்கான என் திறனிலும் நம்பிக்கையைத் தருகிறது. எனது சொந்த வெற்றியில் என்னால் நம்பிக்கையுடனும் உறுதியாகவும் இருக்க முடிகிறது. இந்த நம்பிக்கை எனக்கு காரியத்தை பாதி வழியில் விட்டுவிடாமல்கடைசி வரை ஏதாவது செய்ய ஊக்கத்தை அளிக்கிறது. என் பாதையில் இருந்து என்னைத் தடுத்து நிறுத்துவதாகத் தோன்றும் ஒவ்வொரு தடையிலிருந்தும்,  நான் முன்னேறி வருவதைக் காண்கிறேன்,  என்னை சிறப்பாகவும் ஆக்கிகொள்கிறேன். எனவே நான் தொடர்ந்து வெற்றியை அனுபவம் செய்ய முடிகிறது.