10.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

கொடுப்பது:

நாம் எதை கொடுக்கின்றோமோ அதைதான் நாம் பெறுகின்றோம்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, மற்றவர்கள் நம்மிடம் நன்றாக நடந்து கொள்ளும் போது, நாமும் அதே விதத்தில் நன்றாக நடந்து கொள்வதற்காக காத்திருக்கின்றோம். ஆனால் மக்கள் எப்போதுமே நேர்மறையான முறையில் நடந்துகொள்வதில்லை. நம்முடைய நோக்கம் சிறப்பாக இருக்கும்போதிலும், நாமும் மற்றவர்களை நடத்துகின்ற விதம் எப்போதுமே சீராக இருப்பதில்லை, மேலும் இது குழப்பத்திற்கு வழிவகுப்பதோடு உணர்வுகளையும் காயப்படுத்துவதாக இருக்கின்றது.

செயல்முறை:

நான் என்ன கொடுக்கின்றேனோ அவை எனக்கு திரும்பி வந்துவிடும் என்பதை நான் புரிந்துகொள்வது அவசியமாகும். என்னை சுற்றி உள்ளவர்களை நோக்கி நான் அமைதியையும் சந்தோஷத்தையும் அனுப்பும்போது, அதை நான் திரும்ப பெறுவேன். ஆனால், இது மேலோட்டமாகவோ (அதாவது வார்த்தைகள் மற்றும் செயலளவில் மட்டுமே) அல்லது நிலையற்றதாகவோ இருக்கக்கூடாது. பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து என்னால் கொடுக்க முடியும்போது, நான் கொடுத்தது எனக்கு இயற்கையாகவே திரும்பி வந்து சேர்ந்து விடும்.