11.02.21                                      

 இன்றைய சிந்தனைக்கு 

மன்னித்தல்:

கடந்த கால விஷயங்களிருந்து விடுபட்டு இருப்பது என்பது நிகழ்காலத்தில் அதன் எதிர்மறையான பாதிப்பை நிறுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் அனேக சமயங்களில் கடந்தகாலத்திற்கு அடிமைகளாக இருக்கின்றோம். ஏதோ ஒரு சம்பவம் வெகு காலத்திற்கு முன்பு நடந்திருந்தாலும் கூட அதை மன்னிக்கவும் மறக்கவும் முடியாதவர்களாக நாம் இருப்பதை நாம் அடிக்கடி காண்கின்றோம். அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கும் எதிர்மறையான உணர்வுகளை மீண்டும் அனுபவம் செய்கின்றோம். மேலும் இதிலிருந்து நாம் வெளிவருவதற்கு சிரமப்படுகின்றோம்.

செயல்முறை:

நான் என்னுடைய மனதை கடந்த காலத்திலிருந்து விடுவிக்க வேண்டும். கடந்து போன சூழ்நிலையிலிருந்து நான் என்ன கற்றுக்கொண்டேன் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். விடுபட்டிருக்க கற்க வேண்டும். ஆனால்மற்றவர்களையும் என்னையும் என்னால் மன்னிக்கமுடியும்போது மட்டும் தான் என்னால் கடந்தகாலத்தை மறக்க முடியும். நான் நடந்தவற்றிலிருந்து கற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே என்னால் மன்னிக்க முடியும். நான் ஒரு சூழ்நிலையிலிருந்து கற்றுக்கொள்ளும் போது, கடந்தகால சங்கிலியிலிருந்து என்னை நான் விடுவித்துக்கொள்கின்றேன்.