11.05.22

இன்றைய சிந்தனைக்கு

உற்சாகம்

உற்சாகத்துடன் இருப்பதென்றால் சுதந்திரமாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருக்கும்போது, உற்சாகத்தோடு இருந்து, ஆர்வமாக முன்னேறி செல்வது சுலபம். ஆனால், ஒரு சிறு விஷயம் தவறாகி போகும்போது, எதையும் செய்வதற்கு நாம் அனைத்து உற்சாகத்தையும் இழக்கும் தன்மை கொண்டுள்ளோம்.  இது நம்மை கட்டிபோட்டுள்ளதுபோல் உணர செய்ய கூடும். அதன்பிறகு முன்னேறி செல்வது சிரமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோ இருக்க கூடும்.

செயல்முறை:

கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைக்கு பறக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் அதன் இறக்கையை விரித்து உயரே பறப்பதற்கு இயலாமல் உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் உற்சாகத்தோடு இருப்பது என்பது பெரும் உயரத்தை அடையும் சுதந்திரமான பறவையை போலிருப்பதாகும் என்பதை எனக்கு நான் நினைவு படுத்திக்கொள்வது அவசியம். இந்த உள்ளார்ந்த சுதந்திரத்தை நான் அனுபவம் செய்யும்போது, அது கொண்டுவரும் சுகத்தை நான் பாராட்டும்போது எதுவும் சரியாக நடக்காதா போதும் என்னால் உற்சாகமாக இருப்பதை பேணி பாதுகாக்க முடியும்.