11/07/20

 

திருப்தி ஒருவரை நற்குணங்கள் உடையவராக ஆக்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

திருப்தியாக இருப்பவர் சுயநலத்திலிருந்து விடுபட்டிருக்கின்றார்இருந்தபோதிலும் சுயத்தை உள்ளார்ந்த பொக்கிஷங்களால் நிரப்புவதில் அக்கறையுள்ளவராக இருக்கின்றார். இத்தகைய நபர் அவரது பொக்கிஷங்களால் எப்பொழுதும் நிரம்பியவராக இருப்பதை காண்கின்றார். எனவே அவரது எண்ணங்கள்வார்த்தைகள் மற்றும் செயல்கள் எப்போதும் அவரை சுற்றயிருப்பவர்களுக்கு பல நன்மைகளை கொண்டுவருகின்றன.

செயல்முறை:

நான் எப்போதும் திருப்தியுடன் இருக்கும்போதுநான்  எப்போதுமே வெற்றியுடன் இருப்பதாக அனுபவம் செய்கின்றேன். அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் கற்றுக் கொள்வதற்கும்என் அனுபவங்களை பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்கும் எனக்கு சுலபமாக இருக்கிறது. நான் கொடுப்பவராகவும் ஆகின்றேன். இதனால்,  என்னைச் சுற்றி உள்ளவர்களுடைய அன்பும் நல்லாசிகளும் எனக்கு கிடைத்துள்ளனமேலும் என்னால் தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவிக்க முடிகிறது.