11.08.22

இன்றைய சிந்தனைக்கு

தொடர்பு கொள்வது

வார்த்தைகள் நல்லாசிகளுடன் பேசப்படும்போது, அவை சக்தி நிறைந்ததாகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்கள் நம்முடைய கருத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, நாம் மிகவும் அறிவுப்பூர்வமாக பேசும் போதிலும், சில சமயங்களில் நம்முடைய வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, தவறான கருத்தாகிவிடுகின்றது. இதன் காரணமாக, அதிகமான குழப்பங்கள் தோன்றி, நம்முடைய உறவுமுறையை கெடுத்துவிடுகிறது.

செயல்முறை:

நான் கூறும் கருத்து முக்கியமானது - ஆனால், அதை விட முக்கியமானது, நான் அக்கருத்தை எவ்வாறு மற்றும் எந்த உணர்வுகளோடு கூறுகின்றேன் என்பதாகும். நான் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, எவ்விதமான நோக்கத்திலிருந்தும் நான் விடுபட்டு இருப்பது அவசியம். மற்றவர்களுக்காக நான் நல்லாசிகளை கொண்டிருக்கும்போது, இது இயற்கையாகவே நடக்கிறது - அதன்பிறகு, என்னுடைய வார்த்தைகள் உண்மையாகவே சக்திநிறைந்ததாகின்றது.