11/09/20

இன்றைய சிந்தனைக்கு

ஞானம் பெற்றிருப்பது என்றால் மகிழ்ச்சியாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: துல்லியமான ஞானத்தின் அடிப்படையில் சரியான புரிதல் உள்ளவரால் கடினமான சூழ்நிலைகளில் கூட திருப்தியாக இருக்க முடிகிறது. சூழ்நிலைகள் மற்றும் சுற்றியுள்ள மக்களைப் பற்றி தெளிவான புரிதல் இருப்பதால்,  அனைத்து சூழ்நிலைகளிலும் சிறந்ததைக் கொடுப்பதில் சிரமம் இல்லை. அத்தகைய நபர் தனது சொந்த திறன்களை வளப்படுத்த அனைத்து சவால்களையும் பயன்படுத்துகிறார்.

அனுபவம்: ஞானத்தை ஒரு ஆயுதமாக சாதகமான முறையில் பயன்படுத்த முடிந்தால்,  நடக்கும் அனைத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்ன நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது,  ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனவே நான் எதிர்கொள்ளும் மாறுபட்ட சூழ்நிலைகளில் நான் வருத்தப்படவில்லை,  ஆனால் என் வழியில் வரும் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவம் செய்ய முடிகின்றது.