11.10.20

இன்றைய சிந்தனைக்கு

விடுதலை:

தூய உணர்வுகள் மற்றும் நல்லாசிகளின் மூலம் மற்றவர்களை கவலைகொள்வதிலிருந்து நம்மால் விடுவிக்க முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலைகளை எதிர்நோக்கும் மக்கள் அதன் காரணமாக கவலைப்படுவதை நாம் சந்திக்கும்போதுபொதுவாக நாமும் அவற்றை பற்றி சிந்திக்கும் போக்கை கொண்டுள்ளோம். மற்றவர்களை கவலைபடுவதிலிருந்து விடுவிப்பதற்கு பதிலாக நாமும் கவலைப்பட ஆரம்பிக்கின்றோம். இது இருவருக்கும் எவ்விதத்திலும் உதவாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் சூழ்நிலையின் எதிர்மறைதன்மையை அதிகாரிக்கிறது.

செயல்முறை:

கடினமான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றவர்களை நேர்மறையான உணர்வுகளின் சக்தி சென்றடையும் வண்ணம்நம்முடைய நன்மைபயக்கும் உணர்வுகளை நாம் வளர்த்துக்கொள்வது அவசியமாகும். அது சுற்றியுள்ள இருளை நீக்ககூடிய ஒளிவிளக்கை போல செயல்படும். மனதில் நேர்மறையான எண்ணங்கள் இருக்கும்போது மட்டுமே அவர்களால் சில தீர்வை பற்றி சிந்திக்க முடியும்.