11.11.20

இன்றைய சிந்தனைக்கு

முயற்சி:

முயற்சிகளின் பலன் நிச்சயம் கிட்டும் என்று அறிந்திருப்பது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

என் முயற்சியின் விளைவாக இறுதியில் ஒரு நாள் அதன் பலன் கிட்டும் என்று அறிந்திருப்பது முயற்சியின் முக்கியத்துவம் புரிந்திருப்பதாகும். இந்த புரிதல் இருக்கும்போதுமுயற்சியை தொடர்வது சுலபமாக இருப்பதோடுஇது ஒருவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் போஷாக்கும் ஆகும். அதனால்அடையவேண்டியதை அடையும் வரை முயற்சி என்பது கைவிடபடுவதில்லை.

தீர்வு:

என் முயற்சி நிச்சயம் பயனுள்ளதாக இருப்பதை அறிந்திருக்கும்போதுநான் செய்யும் அனைத்தும் என்னை சந்தோஷப்படுத்துகின்றது. என் வாழ்க்கையில் விவகாரங்கள் சரியாக நடவில்லை ஆயினும்முயற்சி எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றதுஎன்னை உற்சாக படுத்துகிறதுசோர்விலிருந்து விடுவிக்கிறது. என் மன மகிழ்ச்சியும் நலமும் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.