11.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

ஒத்துழைப்பு:

அனைவருடைய ஒத்துழைப்பின் மூலம் மிகவும் கடினமான காரியம் கூட சுலபமாக செய்து முடிக்கப்படுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொறுப்பு கொடுக்கப்படும்போது பொதுவாக நாம் ஒருவரே அதை தனியாக செய்வதற்கு திட்டமிடுகின்றோம். பலரை ஈடுபடுத்தாமல் இருப்பது சுலபமானதாக தெரிகின்றது. இது நாம் கையாள்வதற்கு சிக்கலாக அதாவது, பல்வேறு விதமான குணநலன் வாய்ந்தவர்களை தவிர்ப்பதற்கு நமக்கு உதவுகின்றது. இந்த மனோபாவமானது நம்மை மற்றவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் இழக்கச் செய்கின்றது.

செயல்முறை:

பெரிய காரியத்தில் ஈடுபடும்போது, தேவைக்கு ஏற்ப பலரை நான் ஈடுபடுத்தி உள்ளேனா என பார்ப்பது அவசியமாகும். நான் பலரை ஈடுபடுத்தும்போது, அவர்களுடைய அனைத்து விசேஷமான குணங்களையும் நான் பயன்படுத்திகொள்கின்றேன் மேலும் மிகவும் கடினமான காரியத்தை கூட சுலபமாக செய்கின்ற திறமை வாய்ந்தவர் நிச்சியமாக இருக்கின்றார்.