12.01.21

இன்றைய சிந்தனைக்கு

உண்மை:

நீங்கள் எப்பொழுதும் உண்மையாக இருந்தால், நீங்கள் எதற்காகவும் பயப்பட அவசியமில்லை.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்குள் இருக்கும் உண்மை சக்தியை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, உண்மையான தைரியம் வருகின்றது. நாம் தொடர்ந்து உண்மையாக இருக்கும்போது, எதற்காகவும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உண்மை சக்தி, தினமும் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கான தைரியத்தைக் கொடுக்கும்.

செயல்முறை:

என்னுடைய செயல்கள் உண்மையின் அடிப்படையில் இருப்பதை நான் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்பொழுது சூழ்நிலைகள் தவறாக இருந்தாலும், என்னால் தைரியமாக இருக்கமுடியும். எனக்குள் உண்மைசக்தி இருப்பதை, எனக்கு நானே நினைவு படுத்திக்கொள்ளும்போது, நான் சந்திக்கும் எவ்வித சவால்களையும் என்னால் கடந்து செல்ல முடியும்.