12.01.23

இன்றைய சிந்தனைக்கு......

நேர்மறைதன்மை:

உண்மையான நேர்மறைதன்மை என்பது மிகவும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் நேர்மறையாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எதிர்மறையான சூழ்நிலையை சந்திக்கும்போது நேர்மறையான எண்ணங்களை பேணுவது மிகவும் கடினமாகவும் சாத்தியமற்றதாகவும் தென்படுகின்றது. நேர்மறையாக இருக்க வேண்டும் என்ற உறுதியான நோக்கம் இருக்கும் போதிலும், உறவுமுறைகள், உடல் உபாதைகள், சிரமமான சூழ்நிலைகள் போன்ற வடிவத்தில் சவால்கள் தோன்றுவதால் நாம் பலவீனமடைவதை காண்கின்றோம்.

அனுபவம்:

உள்ளார்ந்த சுய-மரியாதையை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்கின்ற பயிற்சியானது சிரமமான சூழ்நிலையின்போது நமக்கு உதவுகின்றது. சுய-மரியாதையை தக்கவைத்து கொள்வதென்பது நம்முடைய சொந்த தனித்தன்மையை புரிந்துகொண்டு பாராட்டுவதாகும். இந்த சுய-மரியாதை பயிற்சியினால், நாம் வெளிப்புற சூழ்நிலையை சார்ந்திருப்பதில்லை. ஆனால் உள்ளார்ந்த வலிமையை காண்போம்.