12.02.21                                      

இன்றைய சிந்தனைக்கு 

பாராட்டுதல்:

நம்முடைய சொந்த நற்குணங்களை பாராட்டுவது என்பது தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய நற்குணங்களை பாராட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் இல்லாதவற்றை கருத்தில் கொள்வது மிக சுலபமாகும்நம்முடைய வாழ்க்கையில் சவால் மிக்க சூழ்நிலைகள் வரும்போதுநம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்த முற்படுகின்றோம்இந்த மனப்பான்மையோடுசூழ்நிலையை மாற்றுவற்கு முயற்சி செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம். அப்போது மற்றவர்களை குறை கூறவும் அல்லது காரணங்கள் கொடுக்கவும் முற்படுகின்றோம்.

செயல்முறை:

சவால் மிக்க சூழ்நிலைகளில் என்னிடம் இருப்பதை பாராட்டவும் பயன்படுத்தவும் நான் விசேஷ முயற்சி செய்யவேண்டும். இவ்விதத்தில் நான் தொடர்ந்து முயற்சி செய்யும் போது ஒவ்வொரு சவாலும் என்னிடம் மறைந்திருக்கும் நற்குணங்களை  நான் கண்டுபிடித்து உபயோகபடுத்த எனக்கு அனுமதியளிக்கிறது. இது என்னை செழிப்பாக்குவதோடு தொடர்ந்தும் என்னை முன்னேற்றத்தை அனுபவம் செய்ய தயாராக்குகிறது.