12.05.22

இன்றைய சிந்தனைக்கு

உண்மை

உண்மையின் சக்தி, உங்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள உங்களுக்கு தூண்டுதல் அளிக்கும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நமக்குள் இருக்கும் உண்மை சக்தி அனைத்து சூழ்நிலைகளிடமிருந்தும் கற்றுக்கொள்ள நம்மை தயாராக்குகின்றது. சூழ்நிலைகள் தவறாகி போகும்போது, மற்றவர்களையும் நம்மையும் சாக்குபோக்கு கூறுவதை தவிர்த்து தவறுகளிலிருந்து நாம் எவ்வாறு கற்க முடியுமென்று சிந்துத்துப் பார்க்க முடிகின்றது. சாக்குபோக்கு கூறுவதென்றால் உண்மையை மறைப்பதாகும். இது நம்மை கற்றுக்கொண்டு முன்னேறி செல்வதை தடுக்கின்றது.

செயல்முறை:

இன்று தவறாக நடந்த ஏதோ ஒன்றைப் பற்றி சிந்திக்கும்போது, சூழ்நிலையில் என்னுடைய பாகம் என்ன என்று எனக்குள் நான் கேட்டுக்கொள்வது அவசியம். இதை நான் புரிந்துக்கொள்ளும்போது, எதிர்காலத்தில் எவ்வாறு என்னை நான் திருத்திக்கொள்வது என்பதை நான் தெரிந்துக்கொள்வேன்.