12/07/20

ஒத்துழைப்பு, அழகு மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எல்லோரும் மற்றவர்களுடைய ஒத்துழைப்பை பெற முற்படுகிறார்கள்,  ஆனால் அழகு மற்றவர்களுடன் ஒத்துழைப்பதில் அடங்கியுள்ளது. உண்மையான ஒத்துழைப்பு என்பது இதயத்திலிருந்து கொடுக்கப்படுகிறது மேலும் அது மற்றவர்களின் வாழ்க்கையைத் ஆக்கபூர்வமான வழியில் தொடுகிறது. இது மற்றவர்களும் ஒத்துழைப்பு அளிப்பதற்கு தூண்டுதலாக உள்ளது. இதுவே மற்றவர்களுக்கு நாம் நீட்டிக்கக்கூடிய உண்மையான உதவியாகும்.

அனுபவம்:

என்னால் மற்றவர்களுடன் ஒத்துழைக்க முடியும்போதும் அவர்களுக்கு தேவைப்படும் உதவியை அவர்களுக்கு வழங்க முடியும் போதும் என்னால் நிபந்தனையின்றி கொடுக்கமுடிவதன் மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது. நான் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதிலிருந்து விடுபட்டுயிருக்கின்றேன்,  மேலும் என்னால் மற்றவர்களின் வளர்ச்சியை குறித்து மகிழ்ச்சியடைய முடிகின்றது. மற்றவர்கள் எனக்காக தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லைஆனால் அவர்கள் அதனால் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் ஆகும்.