12.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

விவேகம்:

விவேகமானவராக இருப்பதென்றால் நடக்கின்ற அனைத்திலும் உள்ள ஒழுங்குமுறையை பார்ப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலைகள் தோன்றும்போது, பெரும்பாலும் அந்நேரத்தில் ஏன் அந்த சூழ்நிலை அமைந்தது என புரிந்துகொள்வது நமக்கு கடினமாக இருப்பதை நாம் காண்கின்றோம். இதை புரிந்துகொள்ளாமல், சூழ்நிலைக்கு சரியான விதத்தில் பதிலளிக்க நம்மால் இயலவில்லை, அதாவது மீண்டும் மீண்டும் நாம் தோல்வியை அனுபவம் செய்கின்றோம். 

செயல்முறை:

விவேகமானது, வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என எனக்கு கற்றுக்கொடுக்கின்றது. எதுவுமே சந்தர்ப்பத்தினுடைய பலன் அல்ல, ஆனால் கடந்த காலத்தில் நான் செய்தவற்றின் பலனாகும். அதாவது நான் இன்று எதை செய்தாலும் அதன் விளைவு எதிர்காலத்தில் நடக்ககூடியதில் இருக்கும். இன்று நான் இதை பற்றி சிந்தித்து விவேகமான செயல்களை தொடங்குவேன்.