13.01.21

 இன்றைய சிந்தனைக்கு.........

 

கவனம்:

தன்னுடைய இலக்கை கவனத்தில் கொண்டுள்ள ஒருவர், வெற்றியடைவார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் இலக்கை நோக்கி நாம் சென்றுக்கொண்டிருக்கும் போது, நம்முடைய கவனம் திசை திரும்புவது சுலபம். சில சமயங்களில், நம் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கும் சின்னஞ்சிறு விஷயங்களை பற்றி நாம் சிந்திப்பதில் மும்முரமாக இருப்பதனால், நாம் கவனமற்று, முன்னோக்கி செல்வதை நிறுத்திவிடுகின்றோம்.

செயல்முறை:

முதலில், என்னுடைய லட்சியத்தை நான் தெளிவு படுத்திக்கொள்வது அவசியம். . அதன்பிறகு அதனை நோக்கி எவ்வாறு முயற்சி செய்ய போகின்றேன் என்று சிந்திக்க வேண்டும். என்னை திசை திருப்ப சூழ்நிலைகள் வரும்போது அவை பக்கக்காட்சிகள், அவை எனக்கு முக்கியமற்றது என்று எனக்கு நானே நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு மாறக வெற்றி அடைவதற்கு, நான் என்னுடைய சக்தியை என்னுடைய இலக்கில் கவனமாக செலுத்துவது அவசியமாகும்.