13.03.19

 

இன்றைய சிந்தனைக்கு

 

அகத்தாய்வு:

பலவீனத்திலிருந்து விடுபடுவது என்றால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வது என்பதாகும்.

 

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பெரும்பாலான நேரத்தில், நம்முடைய பலவீனங்களை வெற்றி கொண்டு, முன்னோக்கிச் செல்கிறோம். ஆனால் சில நேரங்களில், நம்முடைய சொந்த பலவீனங்களினால் நாம் வீழ்த்தப்பட்டு, தோல்வியை அனுபவம் செய்கிறோம். அதன்பின், முன்னோக்கிச் செல்வதற்கு பதிலாக, நாம் பின்னோக்கிச் செல்வதை நாம் காண்கின்றோம்.

 

செயல்முறை:

நானும், மற்றவர்களும் நன்மை அடைவதற்காக, எனக்குள்ளிருக்கும் பலவீனங்களின் இறுதி சுவடை அறிந்து, அதை நீக்குவது அவசியம். இதை செய்வதற்கு, நான் தொடர்ந்து பலவீனத்திற்கான காரணத்தை சோதனை செய்து, அதை நீக்க வேண்டும். இப்படிப்பட்ட சோதனையும் மாற்றமும், என்னுடைய பலவீனத்தை வெற்றிக்கொள்வதற்கு எனக்கு உதவி செய்கிறது.