13.05.22

இன்றைய சிந்தனைக்கு

நேர்மை

நேர்மை முன்னேற்றத்தைக் கொண்டு வருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக நேர்மை என்பது உண்மையை கூறுவது அல்லது மற்றவர்களிடம் வெளிப்படையாக பழகுவது என்பதோடு சம்மந்தப்படுத்தி பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் நம்மிடம் நாம் நேர்மையாக இருப்பதைக் காட்டிலும், மற்றவர்களிடம் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதை நாம் காண்கின்றோம். நம்முடைய பலவீனங்களை நமக்கு நாமே ஒத்துக்கொள்வது சிரமாக இருக்கலாம். ஆனால் முன்னேறிச் செல்வதற்கு உண்மையை எதிர்கொள்ள நாம் தைரியமாக இருப்பது அவசியம்.

செயல்முறை:

அனைத்தையும் விட என்னிடம் நான் நேர்மையாக இருப்பது அவசியம். அதாவது என்னுடைய எண்ணங்கள், சொற்கள் மற்றும் நடத்தையை பற்றி நான் ஆழமாக சிந்தித்து பார்ப்பதாகும். என்னிடமே நான் சாக்குபோக்கு கூற ஆரம்பித்தால் நான் உண்மையில் நேர்மையாக இல்லை. என்னுடைய பலவீனங்களை பற்றி, நான் அறிந்துகொள்ளும்போது, என்னால் அவற்றிக்கு தீர்வு கண்டுபிடித்து முன்னோக்கிச் செல்ல முடியும்.