13.06.22

இன்றைய சிந்தனைக்கு

நிகழ்காலத்தில் இருப்பது:

கொண்டாடுவது என்றால், ஒவ்வொரு நொடியையும் இரசிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: பொதுவாக நாம் கொண்டாடும்போது, அந்த நேரத்திற்கு நம்முடைய கவலைகளை மறந்து, நம்மை சுற்றி இருப்பவர்களோடு சந்தோஷமாக இருக்கின்றோம். ஆனால், கொண்டாட்டம் முடிந்தவுடன், நாம் வழக்கமான எண்ணங்களுக்கு திரும்பி விடுகின்றோம். கொண்டாட்டம் என்பது தற்காலிகமானது எனக் கருதுவதால், வாழ்க்கையில், நமக்கு கிடைக்க வேண்டிய அளவிற்கு சந்தோஷம் கிடைப்பதில்லை.

செயல்முறை:

உண்மையான கொண்டாட்டம், என்பது ஒவ்வொரு நொடியின் அழகையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பதாகும்.  ஒவ்வொரு நொடியையும் கொண்டாடுவதன் மூலம், நான் எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பேன். சந்தோஷமாக இருப்பதற்கு சிறப்பான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பதை விட்டுவிடுவேன். அதற்கு மாறாக, ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக பயன்படுத்துவேன்.