13.08.22

இன்றைய சிந்தனைக்கு

வளைந்து கொடுக்கும்தன்மை

பலவீனங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்பது மாற்றத்திற்கான சக்தியை கொண்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம் அனைவரிடமும் உள்ள பலவீனங்கள் சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள சிரமமாக்குகின்றது. நம்முடைய பலவீனங்கள் நம்மை வளைந்து கொடுக்கமுடியாதவர்களாக ஆக்கக்கூடியதால், நாம் புது சந்தர்ப்பங்களை பார்க்கமுடியாதவர்களாக ஆகக்கூடும். அதன்பின், நம்முடைய பலவீனங்களை மாற்ற நமக்கு கடினமாக இருப்பதோடு, எதிர்மறையானவை வளர்வதை காண்கிறோம்.

செயல்முறை:

சூழ்நிலைக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக்கொள்ளும் திறமையை கொண்டிருப்பது, எந்த சூழ்நிலையையும் கையாளுவதற்கான திறமையை எனக்கு கொடுக்கிறது. சுத்தமான தங்கத்தை சூடேற்றும்போது, அது அழகானதாக மாறுவதை போல், நானும் வளைந்துகொடுத்து தூய தங்கத்தை போன்று அழகாக ஆகின்றேன். நான் மாற்றத்தை அரவணைகின்றேன், இது நான் உருவாக்கிய அழகையும், நான் பரப்புகின்ற மகிழ்ச்சியையும் சந்தோஷமாக அனுபவம் செய்ய என்னை ஆயத்தப்படுத்துகின்றது.