13.11.20

இன்றைய சிந்தனைக்கு

ஆசீர்வாதங்கள்:

ஆசீர்வாதங்களுக்கு தகுதியுடையவர் ஆகுவது வெற்றியை எளிதாக்குவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுய நன்மையை பற்றி சிந்திப்பது அதிகரிக்கும்போதுசிலநேரங்களில் அது சுயநலத்தின் வடிவை எடுக்கும் அளவிற்கு அதிகரித்துவிடுகின்றது. நாம் சுயநலமாக இருக்கும்போது மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதையும் அல்லது நம்முடைய செயல்கள் அவர்கள் மீது உண்டாக்கும் விளைவு பற்றியும் சிந்திப்பதை நிறுத்திவிடுகிறோம். பிறகுநம்மால் பாரமற்ற லேசான தன்மையுடன் முன்னோக்கி செல்ல முடியாதுள்ளது. ஏனென்றால் மற்றவர்களின் தூய ஆசிகளும் நல்லுணர்வுகளும் நம்மிடம் இல்லை.

தீர்வு:

நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும்நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை உள்ளாதா என முதலில் நாம் சோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் காரியத்தில் மற்றவர்களுக்கும் அந்த அளவிற்கு நன்மை இருக்கும்போதுமற்றவர்களுடைய நல்லாசிகளும் அந்த காரியத்திற்கு இருக்கிறது. இந்த நல்லாசிகள் மூலம் நாம் மிக வேகமாக முன்னேற முடிகின்றது. மேலும் வெற்றி அடைவது எளிதாக இருக்கிறது.