14.01.23

இன்றைய சிந்தனைக்கு......

பூரணத்துவம்:

பூரணத்துவதிற்கான பார்வை கொண்ட ஒருவர் தொடர்ந்து முன்னேற்றத்தை அனுபவம் செய்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து: 

பல முறை, நாம் நமது வாழ்க்கை பாதையில் முன்னோக்கி செல்லும்போது, நாம் நம்மை, தேக்க நிலையில் காண்கின்றோம்.  நம்முடைய வாழ்க்கையில் எந்த அம்சத்திலும் சிறிதும் முன்னேற்றம் இருப்பதாக தெரியவில்லை. நாம் சிலகாலத்திற்கு பயன்படக்கூடிய ஒரு சில மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்கிறோம். ஆனால் சிறிது காலத்திற்கு பின் நாம் நம்மை அதிருப்தியுடையராக கண்டு நாம் முயற்சிசெய்வதை  நிறுத்திவிடுகின்றோம்.

அனுபவம்:

நாம் தொடர்ந்து நம்முடைய கண் முன்னால் பூரணத்துவதிற்கான பார்வையை கொண்டிருப்பது அவசியமாகும். நாம், நம்மை நாமே என்ன எதிர்பார்க்கிறோம் என கேட்பது அவசியமாகும், மற்றவர்களுக்கு சந்தோஷத்தின் ஆதாரமாக இருப்பதற்கு, தொடர்ந்து கற்றுக்கொள்ள....  அது வாழ்க்கை கொண்டு வரும் அனைத்தையும் பாராட்டும் அதே சமயம் நம்மை தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கு தூண்டுகின்ற எதுவுமாகும்.