14.05.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

தைரியம்:          

உதவி பெறுவதற்குநமக்கு முதலில் தைரியம் வேண்டும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் கடினமான ஒன்றில் ஈடுபடும்போதுபெரும்பாலும்நாம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பவர்களாக நாம் இருக்கின்றோம். நாம் எதிர்பார்க்கும் உதவி நமக்கு உடனடியாக கிடைக்கவில்லை என்றால்நாம் மனச்சோர்வு அடையும் போக்கு உடையவர்களாக இருக்கின்றோம். மேலும்அந்த முயற்சியை நாம் முற்றிலுமாக கைவிட்டுவிடவும் கூடும்.

செயல்முறை:

மற்றவர்களிடமிருந்து உதவியை நான் பெறுவதற்கு முன்புஎனக்கு நானே உதவிசெய்துக் கொள்ளும் தைரியம் இருப்பது அவசியம். என்னுடைய இலக்கை நோக்கி நான் முதல் அடியை எடுத்து வைக்கும்போதுமற்றவர்கள் எனக்கு உதவி செய்ய முன்வருவதை நான் காண்கின்றேன். நான் உதவி கேட்பதற்கு தேவையே இல்லைஆனால்உதவியானதுஎன்னை நோக்கி வருகிறது.