14.05.22

இன்றைய சிந்தனைக்கு

நம்முடைய நற்குணங்கள் என்ற பரிசுகளை பயன்படுத்துவது

விசேஷமானவராக இருப்பதென்றால், நம்முடைய ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அன்பும் அழகும் நிறைந்திருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்முடைய நற்குணங்கள் என்ற பரிசுகளை சரியான சூழ்நிலையில் பயன்படுத்த எண்ணி சில சமயங்களில் நாம் காத்திருக்கின்றோம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் அவற்றை அதிகமாகவே பயன்படுத்தியிருக்கலாம். நம் ஒவ்வொருவருக்கும், சாதாரண தருணங்களை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றும் சக்தி இருக்கின்றது.

செயல்முறை:

என்னுடைய நற்குணங்கள் என்ற பரிசுகளை, நான் உணர்வுபூர்வமான வழியில் அறிந்திருக்கும்போது என்னால் நான் சொல்வது அல்லது செய்வது அனைத்தையுமே அர்த்தமுள்ளதாகவும் சக்திவாய்ந்ததாகவும் ஆக்கமுடியும். எதுவுமே வீணாகவில்லை அல்லது சாதாரணமானதாகவும் ஆகவில்லை; நான் செய்வது அனைத்தும் சிறப்பானதாக ஆகின்றது. என்னுடைய மனம் சாதாரணமான  அல்லது சூழ்நிலையின் எதிர்மறையானவற்றில் சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த தருணங்களை என்னுடையதாக ஆக்கிக்கொண்டு என்னால் சந்தோஷமாக இருக்க முடிகின்றது.