14/09/20

இன்றைய சிந்தனைக்கு

கவனக்குறைவின் தளர்வான திருகை இறுக்குவது சக்திவாய்ந்தவராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: கவனக்குறைவாக இருப்பவரால் தன்னிடம் இருக்கும் சக்திகளையும் திறன்களையும் பயன்படுத்த முடியாது. தன் உள்லிருக்கும் அனைத்து நேர்மறையான குணங்களும் வீணாக்கப்படுகின்றன,  ஏனென்றால் கவனக்குறைவானவரால் அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த முடியாது. ஆனால் கவனக்குறைவின் தளர்வான திருகை இறுக்கக்கூடியவருக்குள் இருக்கும் திறன்களை அடையாளம் கண்டு பயன்படுத்த முடியும். எனவே அத்தகைய நபருக்குள் இருக்கும் சக்தி தெரியும்.

அனுபவம்: நான் கவனக்குறைவிலிருந்து விடுபட முடிந்தால்,  என்னால் லேசானவும் மகிழ்ச்சியுடனும் முன்னேற முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த சிரமமும் அனுபவம் செய்யப்படவில்லை,  எந்தவொரு காரணத்தையும் கூறாமல் அனைத்தையும் என் திறனுக்கு ஏற்றவாறு செய்கிறேன். அனைத்து சூழ்நிலைகளிலும் நான் சக்திவாய்ந்தவனாக இருப்பதை அனுபவம் செய்ய முடிகிறது,  ஏனெனில் நான் சூழ்நிலையின் மாஸ்டர் ஆவேன்.