14.11.20

இன்றைய சிந்தனைக்கு

தூய எண்ணங்கள்

தூய எண்ணங்களை கொண்டவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாப்பை அனுபவம் செய்கிறார்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எதிர்மறை சூழ்நிலைகள் இருக்கும்போதுபொதுவாக நாம் எதிர்மறையான எண்ணங்களை மிக எளிதாக சிந்திக்கின்றோம். இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் நம்மை மேலும் எதிர்மறையை நோக்கி அழைத்து செல்கின்றன. நாம் இந்த எதிர்மறை வட்டத்தில் பிடிபட்டால்அதன்பின் நம் எண்ணங்களை நேர்மறையாக மாற்றுவது மிகவும் சிரமமாகின்றது.

தீர்வு:

நாம் எவ்விதமான எதிர்மறையான சூழ்நிலைகளை சந்திக்கும்போதும் யார் மீதும் பழி சுமத்தாமல் இருப்பதில் கவனம் கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலையில் நாம் கூடுமானவரை நேர்மறைதன்மையை பராமரிக்க வேண்டும்அதன்பிறகு நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் நேர்மறையாக மாறுவதை நம்மால் காணமுடிகின்றது. இது நமக்கு ஒரு பாதுகாப்பான வழிமுறையாக செயல்படுகிறது.