14.11.23

இன்றைய சிந்தனைக்கு.....

நம்பிக்கை:

நம்பிக்கை கொண்டிருப்பவரால் எதிர்மறைதன்மையை வெற்றிகொள்ள முடிகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எப்பொழுதெல்லாம் சவாலை சந்திக்கின்றோமோ, அப்போது நாம் தீர்மானத்தை கண்டுபிடிக்கின்ற நம்முடைய திறமையின் மேல் நம்பிக்கை இழக்கும் போக்கு நம்மிடம் இருக்கிறது. நாம் இப்போது சந்திக்கின்ற பிரச்சனையை சரிசெய்வதற்கான வளங்கள் நம்மிடம் இருக்கும்போதிலும் அவற்றை பற்றி நாம் விழிப்புணர்வின்றி இருக்கின்றோம்.

செயல்முறை:

எதிர்மறைதன்மையை வெற்றிகொள்வதற்கு, நான் என் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையை பலப்படுத்துவது அவசியமாகும். நான் வெற்றியாளர் என்ற ஒரே எண்ணத்தில் கவனம் செலுத்தும்போது, எதிர்மறையான எண்ணங்கள் கலைந்துவிடுவதை காண்கின்றேன். எப்பொழுதெல்லாம் என்னுடைய நம்பிகையை ஒரு சக்திவாய்ந்த நேர்மறையான எண்ணத்தில் திசைதிருப்புகின்றேனோ அப்போது அங்கு, எதிர்மறையானவற்றிற்கு இடமில்லை.