15.02.21
இன்றைய சிந்தனைக்கு
நேர்மறைதன்மை:
நம்முடைய சொந்த திறமைகளை அங்கீகரிப்பது என்பது, வாழ்க்கையில் சிறந்தவற்றை பெறுவதற்கு தகுதி அடைவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நமக்கு வாழ்க்கையில் அதிகமான ஆசைகளும், எதிர்பார்புகளும் இருக்கின்றன. நாம் விரும்பியது நமக்கு கிடைக்காதபோது, வெறுப்பு, மனச்சோர்வு அல்லது தாழ்வுமனப்பான்மை போன்ற எதிர்மறையான உணர்வுகளுக்கு அதற்கு வழிவகுக்கலாம். சில சமயங்களில் இந்த உணர்வுகளில் நாம் அதிகமாக சிக்கிக் கொள்வதனால், நல்ல விஷயங்கள் நமது பார்வைக்கு தென்படாமல் இருந்துவிடுகின்றது.
செயல்முறை:
என்னுடைய தனித்துவமான திறமைகளையும், அவற்றை நான் எவ்வாறு பயன்படுத்துகின்றேன் என்பதையும் நான் அறிந்திருக்கும்போது, நான் ஆசைப்படுவதைக் காட்டிலும் எனக்கு தகுதியானதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. இனி, நான் எனக்கு இல்லாத திறமைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசுகளிலும், என்னிடம் இருப்பவற்றை பயன்படுத்தி எவ்வாறு நான் ஆசைப்பட்டதை பெறுவது என்பதிலும் கவனம் செலுத்துவேன்.