15.05.22

இன்றைய சிந்தனைக்கு

கொடுப்பது

தன்னை உயர்வாக கருதுவது என்றால் தாராள மனதுடையவராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மை நாம் 'உயர்வாக' கருதும்போது, பொதுவாக நாம் மற்றவர்களிடமிருந்தும், அதே மரியாதையை எதிர்பார்கின்றோம். அவர்கள் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், நமக்கு கிழ்படிந்து நடக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம். ஆனால், மற்றவர்கள் அனைத்து நேரங்களிலும் நாம் கூறுவதை கேட்டுக்கொண்டு அல்லது நமக்கு கீழ்படிந்து நடக்காததை நாம் காண்கின்றோம். இது ஏமாற்றத்திற்கு வழிவகுத்து, நம்முடைய அதிகாரத்தை மேலும் பலவந்தமாக பயன்படுத்த தூண்டுகின்றது.

செயல்முறை:

உயர்ந்தவராக இருப்பது என்றால் கொடுப்பவராக இருப்பதாகும். நான் உயர்ந்தவராக இருப்பதென்றால் மற்றவர்கள் என்னை விட குறைவான அதிர்ஷ்டமுடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு, எனக்கு கொடுக்கப்பட்டுள்ளதை, அவர்களுக்கு உதவி செய்வதற்காக, நான் பயன்படுத்த வேண்டும். இந்த மனோபாவம் மற்றவர்களின் நல்லாசிகளை ஈர்க்க உதவி செய்வதோடு, மேலும் நான் முன்னேற்றம் அடைய உதவி செய்யும்.