15/07/20

இன்றைய சிந்தனைக்கு

திடமான மனதின் மூலம் அசாத்தியமானதும் சாத்தியம் ஆகும். அங்கு வெற்றிக்கு உத்திரவாதம் உள்ளது.

சிந்திக்க வேண்டிய கருத்து: 

திடமான மனம் கொண்டவர் மோசமான சூழ்நிலைகளிளும் ஒருபோதும் மனம் தளராமல் இருக்கின்றார். சுய முன்னேற்றத்திற்காக அனைத்து சவால்களையும் அவரால் சந்திக்க  முடியும். அவர் கையாள கடினமாக இருக்கும் சூழ்நிலைகளால் ஒருபோதும் தடுமாற மாட்டார்,  ஆனால் அவரால் புதிய யோசனைகளை ஆக்கப்பூர்வமாக கொண்டு வர முடியும்அது தடைகளை சுலபமாக கடக்க உதவும்.

அனுபவம்:

திடமான மனம் எனக்கு நம்பிக்கை அளித்து நான் சாதிக்க வேண்டியதை அடைய எனக்கு திறனை அளிக்கிறது. என்னால் நம்பிக்கையுடன் இருக்கமுடிகிறது. மேலும் என்னுடைய வெற்றி பற்றி நான் நம்பிக்கையோடு இருக்கின்றேன். இந்த நம்பிக்கை என்னை எந்த காரியத்தையும் பாதியில் விட்டுவிட அனுமதிக்காமல் இறுதி வரை ஏதாவது செய்ய வேண்டும் என்று ஊக்கமளிக்கிறது. என் பாதையில் இருந்து என்னை விலக்குவது போல் தோன்றுகிற ஒவ்வொரு தடையிலிருந்தும்  நான் முன்னேற்றம் பெறுவதை காண்கிறேன். இது  என்னை மென்மேலும் சிறப்பாக்குகிறது. எனவே நான் தொடர்ந்து வெற்றியை அனுபவம் செய்கின்றேன்.