15.08.22

இன்றைய சிந்தனைக்கு

நேர்மறைதன்மை

நேர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பதென்றால் நலன் விரும்பியாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக, நாம் அனைவருக்கும் சிறப்பானவற்றையே விரும்புகின்றோம். மேலும் அனைத்தும் நன்றாக நடப்பதை உறுதி செய்துக்கொள்கின்றோம். ஆனால் உண்மையாக நமக்கு சேவையை பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மற்றவருக்கு ஸ்தூல அளவில் உதவி செய்வது என்று சேவையை பற்றிய நம்முடைய கருத்து, எல்லைக்குட்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும், எண்ணங்களே அதிக சக்தி வாய்ந்ததாகும். ஏனென்றால், நம்முடைய எண்ணங்கள் நாம் செய்யும் அனைத்து செயலையும் பேச்சையும் பாதிக்கின்றது.

செயல்முறை:

நல்ல எண்ணங்களால் நிறைந்து இருப்பது என்றால் உண்மையான நலன் விரும்பியாக இருப்பதாகும். நான் ஞானப் பொக்கிஷத்தால் நிறைந்து இருக்கும்போது, என்னுடைய மனதின் மூலம் நேர்மறையான அதிர்வுகளை என்னால் பரவச் செய்ய முடிகின்றது. நான் சந்திக்கின்ற அனைவருக்காகவும் நல்லாசிகளை கொண்டுள்ளேன். மேலும், என்னுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மற்றவருக்கு நன்மையை கொண்டுவருகின்றது.